உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நாளை டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு; 146 மையங்களில் 41,445 பேர் பங்கேற்பு

நாளை டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு; 146 மையங்களில் 41,445 பேர் பங்கேற்பு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை (ஜூன் 9) டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு நடக்கிறது. 146 மையங்களில் 41 ஆயிரத்து 445 பேர் தேர்வு எழுத முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஜூன் 9ல் நடைபெறவுள்ள டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைமை வகித்து கலெக்டர் விஷ்ணு சந்திரன் கூறியதாவது:குரூப் -4 தேர்வு காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடக்கிறது. விண்ணப்பித்தவர்கள் காலை 9:00 மணிக்குள் தேர்வு எழுதும் அறைக்கு வரவேண்டும். அதன் பிறகு வருபவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.அலைபேசி, ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டுவரக் கூடாது. 146 மையங்களில் உள்ள 165 அறைகளில் 41 ஆயிரத்து 445 பேர் தேர்வு எழுத உள்ளனர்.தேர்வை கண்காணிக்க முதுநிலை வருவாய் அலுவலர் நிலையில் ஆய்வு அலுவலர்களாக 165 பேரும், துணை கலெக்டர் நிலையில் 9 கண்காணிப்பு அலுவலர்களும், கருவூலத்திலிருந்து தேர்வு நடைபெறும் மையத்திற்கு வினாத்தாளை எடுத்துச் செல்லவும், தேர்வு முடிந்த பிறகு விடைத்தாளை கருவூலங்களுக்கு எடுத்துச் செல்ல 39 நகர்வு குழுக்கள் (மொபைல் டீம்), 11 பறக்கும் படை குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகளை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றார்.மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர், உதவி கலெக்டர் (பயிற்சி) மொகத் இர்பான், டி.என்.பி.எஸ்.சி., சார்பு செயலாளர் அனந்த பத்மநாபன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரபாகரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி