உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் - கமுதி, கடலாடி ரோட்டில் கண்டபடி நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.முதுகுளத்துார் காந்தி சிலை அருகே தாலுகா அலுவலகம், கிளை சிறைச்சாலை, வட்டார கல்வி அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. -கமுதி, கடலாடி செல்லும் ரோட்டை ஆக்கிரமித்து டூவீலர் மற்றும் வாகனங்களை அவ்வப்போது நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் எதிரேவரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்​. அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ், பள்ளி வாகனங்கள் செல்வதற்கும் சிரமப்பட்டு வருகின்றனர். விசேஷ நாட்களில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் உரிய நேரத்தில் பணிக்கு செல்ல முடியாமல் பணியாளர்கள் தவிக்கின்றனர். எனவே ரோட்டை ஆக்கிரமித்து போக்குவரத்திற்க இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ