உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் டூவீலரில் பணம் திருட்டு: பரவும் வீடியோ

பரமக்குடியில் டூவீலரில் பணம் திருட்டு: பரவும் வீடியோ

பரமக்குடி : பரமக்குடி சுவாமி சன்னதி தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலரில் இருந்து இளைஞர் ஒருவர் பணத்தை திருடும் சி.சி.டி.வி., காட்சிகள் பரவுகிறது.பரமக்குடி சுவாமி சன்னதி தெருவில் ஆக., 17 அன்று காலை 11:00 மணிக்கு பூட்டிய கடை முன்பு டூவீலர் நிறுத்தப்பட்டிருந்தது. இளைஞன் ஒருவன் அதில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள், பண பையை எடுத்துள்ளார்.இது தொடர்பான சி.சி.டி.வி., வீடியோ காட்சிகள் பரவி வருகிறது. அதில் வங்கியில் இருந்து எடுத்த பணம் ரூ. 80 ஆயிரம் திருடு போனதாகவும், பொது மக்கள் அனைவரும் விழிப்புணர்வு இருக்க வேண்டும். பரமக்குடி டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக வீடியோவில் கூறியுள்ளனர். ஆனால் திருட்டு நடந்து இரண்டு நாட்களாகியும் நேற்று மாலை வரை எந்த புகாரும் வரவில்லை என போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்