உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் மீண்டும் அனுமதியின்றி மீன் பிடிப்பு

ராமேஸ்வரத்தில் மீண்டும் அனுமதியின்றி மீன் பிடிப்பு

ராமேஸ்வரம், : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மீன்துறையினரிடம் அனுமதி டோக்கன் பெறாமல் மீண்டும் மீனவர்கள் 20 படகுகளில் மீன்பிடிக்க சென்றதாக மற்ற மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.மீன்பிடி தடை காலம் முடிவதற்குள் ஜூன் 14 மதியம் 3:00 மணிக்கு ராமேஸ்வரம், மண்டபத்திலிருந்து 1200 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.இப்படகுகளுக்கு மீன்துறையினர் அபராதம் விதிக்க உள்ளனர்.இந்நிலையில் 5 நாட்களுக்கு பின் நேற்று காலை 6:30 மணிக்கு மீன் பிடிக்கச் செல்ல மீன்துறையினர் அனுமதி டோக்கன் வழங்கினர். ஆனால் நேற்று அதிகாலை 5:30 மணிக்கு 20 படகுகளில் மீனவர்கள் அனுமதி டோக்கன் வாங்காமல் மீன்பிடிக்கச் சென்றதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மீன்துறை அதிகாரிகளிடம் ராமேஸ்வரம் மீனவர்கள் சங்க தலைவர் என்.ஜே.போஸ் புகார் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: ஜூன் 14ல் தடையை மீறி மீன்பிடிக்க சென்றதில் இறால் மீனுக்கு ஏற்றுமதி கம்பெனி உரிமையாளர்கள் இன்று வரை விலை நிர்ணயிக்காமல் ரகசியம் காக்கின்றனர். மீனுக்கு விலை குறைக்க திட்டமிட்டு உள்ளனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.இச்சூழலில் நேற்று மீண்டும் அனுமதி டோக்கன் இன்றி 20 படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் கடலுக்குள் சென்றனர். பாதுகாப்புக்கு அரசு வழங்கும் அனுமதி டோக்கனை அவர்கள் பெறாதது வேதனைக்குரியது. இதுகுறித்து விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ