உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடல் வழி பாதுகாப்பு மத்திய அமைச்சர் ஆய்வு

கடல் வழி பாதுகாப்பு மத்திய அமைச்சர் ஆய்வு

ராமேஸ்வரம்:-ராமேஸ்வரம் பகுதி கடல் வழி பாதுகாப்பு குறித்து ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பலில் சென்று மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத் ஆய்வு செய்தார்.இன்று உலக யோகா தினத்தையொட்டி நாடு முழுவதும் யோகா கலை பயிற்சி விழிப்புணர்வு நடக்கிறது. ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ரவுண்டானாவில் ராமநாதபுரம் அருகே உள்ள ஐ.என்.எஸ்., பருந்து கடற்படை விமான தளம் ஏற்பாட்டில் யோகா கலை பயிற்சி நடக்க உள்ளது. இதில் பங்கேற்க நேற்று மாலை மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத் , ஹெலிகாப்டரில் ஐ.என்.எஸ்., பருந்து கடற்படை விமான தளத்தில் வந்திறங்கினார். அங்கிருந்து காரில் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை நிலையம் சென்றார். அங்கிருந்து ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பலில் தனுஷ்கோடி, ராமேஸ்வரம் கடல் பகுதி பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ