மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
17 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
17 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
17 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
17 hour(s) ago
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா ஆக.29ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.உப்பூரில் விநாயகர் கோயில் மூலவர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளிபடும் வகையில் கருவறை அமையப்பட்டுள்ளதால், இந்த விநாயகர் வெயிலுகந்த விநாயகர் என அழைக்கப்படுகிறார். இங்கு ஆண்டு தோறும் பத்து நாட்கள் சதுர்த்தி விழா நடக்கிறது. இவ்வாண்டு சதுர்த்தி விழா ஆக.29ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினமும் மாலையில் வெள்ளி மூஷிக வாகனம், கேடயம், சிம்ம, மயில், யானை, ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். எட்டாம் நாளான செப்.5ல் சித்தி, புத்தி ஆகிய தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. மறுநாள் செப்.,6 தேரோட்டமும், செப்.,7ல் சதுர்த்தி தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானம், உப்பூர் கிராமத்தினர் செய்கின்றனர்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago