உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயிலில் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

கோயிலில் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

திருவாடானை : திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெறும். வைகாசி முகூர்த்த நாள் என்பதால் நேற்று நிறைய திருமணங்கள் நடந்தது. விழாவிற்கு வந்த வாகனங்கள் கோயில் முன்பும், சன்னதி தெருக்களிலும் நிறுத்தப்பட்டன.இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டூவீலர்கள் நெருக்கடியாக நிறுத்தப்பட்டதால் நடந்து செல்வோர் பாதிக்கப்பட்டனர். முகூர்த்த நாட்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ