உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மஞ்சகுளத்து காளியம்மன் கோயில் ஊருணியில் அதிகளவு மண் எடுப்பு கிராம மக்கள் எதிர்ப்பு

மஞ்சகுளத்து காளியம்மன் கோயில் ஊருணியில் அதிகளவு மண் எடுப்பு கிராம மக்கள் எதிர்ப்பு

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே மஞ்சக்குளத்து காளியம்மன் கோயில் ஊருணியில் அளவுக்கு அதிகமாக சட்ட விரோதமாக மண் அள்ளியதால் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கடந்த 20 நாட்களுக்கு முன்பு மூன்றரை ஏக்கரில் பக்தர்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உள்ள ஊருணியில் சவடுமண் எடுப்பதற்காக கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் இருந்து உரிய அனுமதி பெற்று மண் எடுத்தனர்.இந்நிலையில் வருவாய்த் துறையினர், கனிம வளத்துறையினரின் எவ்வித ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் இன்றி நோக்கம் போல் 20 அடி ஆழத்திற்கு மண் தோண்டி எடுக்கப்பட்டுள்ள செயல் அரங்கேறி உள்ளது. ரெகுநாதபுரம் மேலவலசை கிராம மக்கள் கூறியதாவது:பழமை வாய்ந்த மஞ்சக்குளத்து காளியம்மன் கோயில் அருகே உள்ள ஊருணியில் எப்போதும் மழைக் காலங்களில் தண்ணீர் நிரம்பி இருக்கும். அவற்றில் பக்தர்கள் புனித நீராடுவதற்கும் ஏற்ற வகையில் இருந்தது.இந்நிலையில் சவடு மண் எடுப்பதாக கூறி அரசு சுட்டிக்காட்டிய ஆழத்தை காட்டிலும் பல மடங்கு ஆழத்தில் மண் எடுத்து அதிக லாபம் சம்பாதிக்கின்றனர்.இதனால் கோயில் அருகே உள்ள பகுதி சேதமடைந்து வருகிறது. மழைக்காலத்தில் மண்ணரிப்பு ஏற்பட்டு பக்கவாட்டு பகுதி முழுவதும் இடியும் அபாயம் உள்ளது. கிராம மக்களின் தொடர் எதிர்ப்பால் தற்போது ஊருணியில் மண் தோண்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.இதன் அருகே உள்ள மற்றொரு குளத்திலும் மண் தோண்டுவதற்காக முகாமிட்டுள்ளனர். எனவே வருவாய்த் துறையினர் மற்றும் கனிமவளத் துறையினரின் உரிய அனுமதியோடு வழிகாட்டுதலோடும் மண் அள்ளி கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுகுறித்து கிராம மக்கள் சார்பில் கலெக்டருக்கு புகார் மனு அளித்துள்ளோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை