உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குடிநீர் சப்ளை இல்லாததால் கிராம மக்கள் பஸ் மறியல்

குடிநீர் சப்ளை இல்லாததால் கிராம மக்கள் பஸ் மறியல்

திருவாடானை: திருவாடானை அருகே கோடனுார் ஊராட்சிக்கு குடிநீர் வழங்க கோரி அப்பகுதி மக்கள் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.திருவாடானை அருகே கோடனுார் ஊராட்சி கோடனுார் மற்றும் கிளியூர் கிராமங்களுக்கு பல மாதங்களாக குடிநீர் சப்ளை இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். அதிகாரிகளிடம் பலமுறை குடிநீர் வழங்க வலியுறுத்தியும் கண்டுகொள்ளாததால் நேற்று காலை 9:15 மணிக்கு திருவாடானை-ஓரியூர் ரோட்டில் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அந்த வழியாக செல்லும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பி.டி.ஓ., கணேசன் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது பொதுமக்கள் குடிநீர் வழங்க கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. குடிநீருக்காக அலைமோதும் சூழல் உள்ளது. தீர்வு காணும் வரை கலைந்து செல்லமாட்டோம் என்றனர். அலுவலர்கள் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கபடும் என்று உறுதியளித்தனர்.இதனை தொடர்ந்து பஸ் மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை