உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆண்டிபட்டி இன்ஸ்பெக்டருக்கு கொலை வழக்கில் பிடிவாரன்ட்

ஆண்டிபட்டி இன்ஸ்பெக்டருக்கு கொலை வழக்கில் பிடிவாரன்ட்

ராமநாதபுரம்:கொலை வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத தேனி மாவட்டம் ஆண்டிபட்டி இன்ஸ்பெக்டருக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது.ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டையை சேர்ந்தவர் ரஞ்சிதம் 27. இவருக்கும் பரமக்குடி அருகே தரிக்கொம்பன் கிராமத்தை சேர்ந்த குமரகுருவுக்கும் திருமணம் நடந்தது. இரு குழந்தைகள் உள்ளனர். குமரகுரு மலேசியாவில் பணிபுரிந்து வந்தார். பரமக்குடி எம்.எஸ்.அக்ரஹாரம் தெருவில் வசித்து வந்த ரஞ்சிதத்தை 2013 செப்.3 ல் தனியாக இருந்த போது மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு 9 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். பரமக்குடி போலீசார் விசாரித்தனர்.மலேசியாவில் இருந்து திரும்பிய குமரகுரு, மனைவி ரஞ்சிதம் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்ற உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., க்கு மாற்றப்பட்டது.போலீசார் இருவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் சரவணகுமார் இந்த வழக்கில் தொடர்ந்துஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து சரவணக்குமாருக்கு பிடி வாரன்ட் பிறப்பித்து நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார். சரவணக்குமார் தற்போது ஆண்டிபட்டியில் பணிபுரிந்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ