உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பவளநிற வல்லியம்மனுக்கு வளைகாப்பு சுமங்கலி பூஜையில் பங்கேற்ற பெண்கள்

பவளநிற வல்லியம்மனுக்கு வளைகாப்பு சுமங்கலி பூஜையில் பங்கேற்ற பெண்கள்

சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயில் கடற்கரை அருகே பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இங்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு பசு மற்றும் கன்றுக்கு கோமாதா பூஜை நடந்தது.காலை 8:00 மணிக்கு உற்ஸவர் பவளநிறவல்லியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. உற்ஸவர் அம்மனை ஏராளமான பெண்கள் பல்லாக்காக சுமந்து வெளிப்பிரகார வீதி உலா வந்தனர்.பின்னர் காலை 9:00 மணிக்கு உற்ஸவர் பவளநிற வல்லியம்மனுக்கு ஏராளமான வளையல்கள் வளை காப்பு சூட்டப்பட்டு அதே நேரத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்களால் சுமங்கலி பூஜை நடந்தது. தாம்பூல பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானம் நடந்தது.ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் பவளம் மகளிர் குழுவினர் செய்திருந்தனர். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ