உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கரிமூட்டம் போடுவதில் தொழிலாளர்கள் ஆர்வம்

கரிமூட்டம் போடுவதில் தொழிலாளர்கள் ஆர்வம்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கரிமூட்டம் போட்டு கரி உற்பத்தி செய்வதில் தொழிலாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா மற்றும் சுற்றுப்புற கிராமங்கள் அனைத்தும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளன. ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் தற்போது பருத்தி, பயறு வகைகள் உள்ளிட்ட சிறு தானிய சாகுபடிகள் மட்டுமே கோடை சாகுபடியாக சில விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் மற்ற விவசாயிகள் விவசாயப் பணிகள் துவங்கும் வரை ஆண்டு தோறும் சீமைக்கருவேல மரம் வெட்டும் தொழிலில் ஆர்வம் காட்டுவது வழக்கம். ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் இன்னும் நெல் விதைப்பு பணி துவங்க இரண்டு மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில் விவசாயிகள் சீமைக்கருவேல மரங்களை வெட்டி நேரடியாக எடையிட்டு விறகுகளாகவும், கரி மூட்டம் போட்டு கரி விற்பனை செய்கின்றனர்.குறிப்பாக ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் விறகு வெட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பெரிய விறகுகளை கரிமூட்டம் மூலம் கரிகளாக்கி விற்பனை செய்வதில் கூடுதல் லாபம் கிடைப்பதால், தொழிலாளர்கள் கரிமூட்ட தொழிலில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்