| ADDED : ஜன 09, 2024 12:11 AM
ஆர்.எஸ்.மங்கலம், ; ஆர்.எஸ்.மங்கலம் யூனியனில் நிரப்பப்பட உள்ள இரண்டு காலி பணியிடங்களுக்கு 105 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் ஜன.12 ல் நேர்காணல் நடப்பதாக பி.டி.ஓ., ராஜேந்திரன் தெரிவித்தார்.ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் , ஒரு இரவு காவலர் பணியிடம் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட நிலையில் அலுவலக உதவியாளர் பணிக்கு 78 பேர், இரவு காவலர் பணிக்கு 27 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள 2 காலி பணியிடங்களுக்கு 105 பேர் விண்ணப்பம் செய்துள்ள நிலையில் நேர்காணல் ஆர்.எஸ். மங்கலம் யூனியன் அலுவலகத்தில் ஜன.12ல் நடைபெற உள்ளதாக பி.டி.ஓ., ராஜேந்திரன் தெரிவித்தார்.இரண்டு பணியிடங்களுக்கு 105 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் முறையாக நேர்காணல் செய்து தகுதியானவரை தேர்ந்தெடுப்பதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என தேர்வர்கள் வலியுறுத்தினர்.