| ADDED : நவ 18, 2025 03:57 AM
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கார்த்திகை முதலாவது சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிேஷகம் நடந்தது. முன்னதாக 108 சங்குகளில் நீர் நிரப்பி யாக சாலையில் வைத்து வேள்வி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க அபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனாய வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர், நம்புதாளை நம்புஈஸ்வரர், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர், வட்டாணம் காசிவிஸ்வநாதர் கோயில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. ராமநாதபுரம்: கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு ராமநாதபுரம் நீலகண்டி ஊருணி காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோயிலில் 108 சங்குகள் வைத்து யாகபூஜைகள் செய்து, மூலவருக்கு அபிேஷகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.