உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலங்கைக்கு கடத்த முயன்ற   1,200 கிலோ மஞ்சள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற   1,200 கிலோ மஞ்சள் பறிமுதல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே, இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த, 1,200 கிலோ மஞ்சள் மூடைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உச்சிப்புளி பகுதியில் நேற்று முன்தினம் மஞ்சள் மூடைகளை இலங்கைக்கு கடத்துவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதிகாரிகள் அப்பகுதியில் ரோந்து சென்றனர். களிமண்குண்டு பகுதியை அடுத்த சல்லித்தோப்பு கடற்கரையில் சுங்கத்துறையினர் ஆய்வு செய்த போது, கடற்கரையோரம் சில மூட்டைகள் கிடந்தன. அவற்றை சோதனை செய்த போது, உள்ளே சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் இருப்பது தெரிய வந்தது. இவ்வாறு, 28 மூடைகளில், 1,200 கிலோ மஞ்சள் இருந்தன. இதன் மதிப்பு 3 லட்சம் ரூபாய் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மஞ்சள் மூடைகளை, சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று சுங்கத்துறையினர் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை