உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அப்துல்கலாம் நினைவகத்திற்கு 1.34 கோடி பயணிகள் வருகை

அப்துல்கலாம் நினைவகத்திற்கு 1.34 கோடி பயணிகள் வருகை

ராமேஸ்வரம்:-ராமேஸ்வரம் அருகே உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவகத்தை இதுவரை 1 கோடியே 34 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர்.ராமேஸ்வரத்தில் பிறந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 2015 ஜூலை 27ல் இறந்தார். அவரது நினைவாக ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பு என்ற இடத்தில் டி.ஆர்.டி.ஓ., எனும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு கழகம் சார்பில் பிரமாண்டமான நினைவகம் அமைத்தது. இதனை பிரதமர் மோடி 2017 ஜூலை 27ல் திறந்து வைத்தார்.இந்த நினைவகத்திற்குள் அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு புகைப்படங்கள், ஓவியங்கள், பொக்ரானில் நடந்த அணுகுண்டு சோதனையை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடன், அப்துல் கலாம் கண்டு ரசிப்பது போன்ற தத்துவமான மெழுகு சிலைகள், மாதிரி அக்னி ஏவுகணை, அப்துல்கலாம் பயன்படுத்திய பொருள்கள் கண்காட்சிக்காக வைத்துள்ளனர். இந்த நினைவகம் திறந்த நாள் முதல் நேற்று வரை 1கோடியே 34 லட்சம் பேர் கண்டு ரசித்து, கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி உள்ளனர். 2024 டிச.,க்குள் பார்வையாளர்கள் எண்ணிக்கை 2 கோடியை தாண்ட வாய்ப்புள்ளது என அப்துல்கலாம் பேரன் சேக்சலீம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்