உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மூச்சு திணறி 14 ஆடுகள் பலி

மூச்சு திணறி 14 ஆடுகள் பலி

முதுகுளத்துார்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே சடையனேரி கிராமத்தில் 14 ஆடுகள் மூச்சு திணறி இறந்தன. சடையனேரியைச் சேர்ந்த முருகன் 50, ஆடுகள் வளர்க்கிறார். வீட்டின் அருகே இரவு கிடையில் அடைத்துள்ளார். பிறகு நேற்று காலையில் வந்து பார்த்தபோது 14 ஆடுகள் இறந்து கிடந்தன. காக்கூர் கால்நடை டாக்டர் மோகன், வி.ஏ.ஓ., பூமுருகன் பார்வையிட்டனர். ஒரே கூடையில் அதிக ஆடுகளை அடைத்து வைத்தால் மூச்சு திணறி ஆடுகள் இறந்துவிட்டதாக டாக்டர் மோகன் கூறினார். இருப்பினும் ஆடுகள் இறப்பிற்கு வேறு காரணம் இருக்குமா என விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ