உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வேன் டிரைவருக்கு வலிப்பு விபத்தில் 22 பேர் காயம்

வேன் டிரைவருக்கு வலிப்பு விபத்தில் 22 பேர் காயம்

பரமக்குடி : பரமக்குடி அருகே நான்கு வழிச்சாலையில் ராமேஸ்வரத்தில் இருந்து திரும்பிய வேன் டிரைவருக்கு வலிப்பு ஏற்பட்ட நிலையில் அதில் விபத்துக்குள்ளாகி 22 பேர் காயமடைந்தனர். அருப்புக்கோட்டையைச் சேர்ந்த குடும்பத்தினர் 25 பேர், இறந்த உறவினர் ஒருவருக்கு திதி கொடுக்க ராமேஸ்வரம் சென்றனர். பின்னர் நேற்று மதியம் 3:00 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து அருப்புக்கோட்டையை நோக்கி வேனில் புறப் பட்டனர். அப்போது டிரைவர் நாகேஸ்வர ராவுக்கு 50, வலிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த வேன் பரமக்குடி- மதுரை நான்கு வழி சாலை சுந்தனேந்தல் பகுதியில் பள்ளத்தில் சாய்ந்து மரத்தின் மீது மோதி நின்றது. டிரைவர் உட்பட இதில் பயணம் செய்த 13 ஆண்கள், 9 பெண்கள் உட்பட 22பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு, பரமக்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பரமக்குடி டவுன் போலீசார் விசாரிக் கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை