உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  திருவாடானை தாலுகாவில் 22,200 எக்டேர் விவசாய நிலங்கள் பயிர் காப்பீட்டில் பதிவு 

 திருவாடானை தாலுகாவில் 22,200 எக்டேர் விவசாய நிலங்கள் பயிர் காப்பீட்டில் பதிவு 

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் 22,200 எக்டேர் விவசாய நிலங்கள் பயிர் காப்பீட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு உரிய காப்பீடு வழங்க வேளாண் காப்பீட்டு நிறுவனம் சார்பில் காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது. திருவாடானை தாலுகாவில் விவசாயிகள் ஆர்வமாக பதியத் துவங்கினர். நவ.,15 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் பயிர் காப்பீடு செய்ய முடியாததால் கூடுதல் அவகாசம் தர விவசாயிகள் வலியுறுத்தினர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு சில வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இது தவிர இ--சேவை மையங்களில் சர்வர் பிரச்னையால் பதிவு செய்ய முடியவில்லை. இவ்வாறு பல்வேறு காரணங்களால் பயிர் காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்தனர். ஆகவே காப்பீடு செய்ய கூடுதல் அவகாசம் தேவை என்பதால் தேதியை நீட்டிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இதுகுறித்து பல முறை தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக டிச.,1 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது. வேளாண் அலுவலர்கள் கூறுகையில், 26,650 எக்டேர் விவசாய நிலங்கள் உள்ள நிலையில் டிச.,1 வரை 22,200 எக்டேர் நிலங்கள் பயிர் காப்பீட்டில் பதிவு செய்யப் பட்டுள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை