ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர், ஒரு படகு விடுவிப்பு
ராமேஸ்வரம்,:பிரதமர் மோடி வலியுறுத்தலின் பேரில் இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம்
மீனவர்கள் 3 பேரையும், ஒரு படகையும் இலங்கை அரசு நிபந்தனையின்றி
விடுவித்தது.ஏப்.,4, 5ல் இலங்கையில் பயணம் செய்த பிரதமர் மோடி கைது
செய்த தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தினார்.
அதன்படி மார்ச் 18ல் இலங்கை கடற்படை கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்கள் 3
பேரை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவிட்டது. மீனவர்களை நேற்று யாழ்ப்பாணம்
நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தியதும் 3 பேரையும் விடுதலை செய்து
நீதிபதி உத்தரவிட்டார். இவர்களை கொழும்பு அருகே மெரிகானா முகாமில் போலீசார்
தங்க வைத்தனர். ஓரிரு நாட்களுக்கு பின் விமானம் மூலம் சென்னை வர உள்ளனர். படகு விடுவிப்பு
மார்ச் 27ல் இலங்கை கடற்படையினர் கைது செய்த 11 மீனவர்களை பிரதமர் மோடி இலங்கை சென்ற ஏப்.,4ல் விடுதலை செய்தது. இந்நிலையில் மீனவர்களுடன் பறிமுதல் செய்த விசைப்படகையும் நேற்று ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுவித்தது.விசாரணை கைதியாக சிறையில் உள்ள தமிழக மீனவர்களை இலங்கை அரசு அடுத்தடுத்து விடுவிப்பது மீனவர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.