உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / லஞ்ச ஒழிப்புத்துறையில் 17 வழக்குகளில் 31 பேர் கைது! எட்டு இடங்களில் ரூ.97.55 லட்சம் பறிமுதல்

லஞ்ச ஒழிப்புத்துறையில் 17 வழக்குகளில் 31 பேர் கைது! எட்டு இடங்களில் ரூ.97.55 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 17 வழக்குகளில் 31 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். 12 வழக்குகளின் விசாரணை முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளது.எட்டு இடங்களில் நடந்த சோதனையில் 97 லட்சத்து 55 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.ராமநாதபுரம் மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச அதிகாரிகளை கைது செய்வதில் இந்த ஆண்டு அதிக முனைப்பு காட்டுகின்றனர். துறை அதிகாரிகள் மிக வேகமாக செயல்பட்டு வருகின்றனர். 2023 ல் 8 இடங்களில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு 97 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. 4 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.அதே நேரம் 2024 ல் ஒரு இடங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது. லஞ்சம் வாங்கியதாக 17 வழக்குகளில் 24 அரசு ஊழியர்கள், புரோக்கர்களாக செயல்பட்ட 7 தனி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2023 ல் அனைத்து வழக்குகளிலும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மேலும் 2024 ம் ஆண்டில் உள்ள 17 வழக்குககளில் 12 வழக்குகளின் விசாரணை நிறைவு பெற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கான பணிகள் நடக்கின்றன. லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., ராமச்சந்திரன் கூறியதாவது:மக்கள் பிரதிநிதிகள், அரசு பதவியில் இருப்பவர்கள் மக்களிடம் லஞ்சம் கேட்டால் புகார் செய்யலாம். குறிப்பாக ஊராட்சி தலைவர், கவுன்சிலர், ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்கள், மற்றும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி தலைவர்கள் என யார் லஞ்சம் கேட்டாலும் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்கள் துணிச்சலாக புகார் கொடுக்ககலாம். புகார்கள் குறித்து ரகசியம் காக்கப்படும்.ராமநாதபுரம் மாவட்டத்தில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் டி.எஸ்.பி.,யை 94986 52169 என்ற அலைபேசியிலும், இன்ஸ்பெக்டர்களை 94986 52166, 94986 52167 ஆகிய அலைபேசிகளில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ