உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ராமேஸ்வரம் அருகே மின்விளக்கு பழுதால் இருளில் மூழ்கியது

 ராமேஸ்வரம் அருகே மின்விளக்கு பழுதால் இருளில் மூழ்கியது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் மெய்யம்புளி பஸ் ஸ்டாப்பில் மின்விளக்குகள் எரியாமல் உள்ளதால் இருளில் மூழ்கியது. தங்கச்சிமடம் ஊராட்சி மெய்யம்புளி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக் கின்றனர். இக்கிராமத்திற்கு ராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இறங்கி மக்கள் செல்வார்கள். இதனால் ஊராட்சி நிர்வாகம் பஸ் ஸ்டாப்பில் மின்விளக்குகள் அமைத்து இருளை பகலாக்கியது. காலப்போக்கில் மின்விளக்குகளை பராமரிக்காமல் பஸ் ஸ்டாப்பில் இருந்து கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரத்தில் உள்ள சில மின்விளக்குகள் பழுதாகி எரியாமல் உள்ளது. இதனால் இரவில் பாம்பு, விஷ ஜந்துக் களால் விபரீதம் ஏற்படக்கூடும் என்பதால் மக்கள் அச்சத்துடன் வீடுகளுக்கு செல்கின்றனர். ஆகையால் பழுதாகி கிடக்கும் மின் விளக்குகளை சரிசெய்து மீண்டும் ஒளிர செய்ய மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை