உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கழிப்பறையாக்கப்படும் வகுப்பறை அரசு மேல்நிலைப்பள்ளியில் அவலம்

கழிப்பறையாக்கப்படும் வகுப்பறை அரசு மேல்நிலைப்பள்ளியில் அவலம்

பெரியபட்டினம் : ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இரவு நேரத்தில் காவலர் இல்லாதால் சில விஷமிகள் வகுப்பறையை கழிப்பறையாக பயன்படுத்துவதால் ஆசிரியர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர்.பெரியபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை 684 மாணவர்கள் படிக்கின்றனர். தலைமையாசிரியர் உட்பட 12 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். கடந்த ஒரு மாதமாக இரவு நேரங்களில் பள்ளி வளாகத்திற்குள் பூட்டப்பட்டு இருக்கும் வாசல் கதவின் மீது ஏறி குதித்து உள்ளே சென்று சிலர் அட்டூழியம் செய்கின்றனர்.பெரியபட்டினத்தைச் சேர்ந்த எஸ்.டி.பி.ஐ., கட்சி மாவட்ட தலைவர் ரியாஸ்கான் கூறியதாவது: பள்ளியில் இரவு நேர காவலர் பணியிடம் பல ஆண்டுகளாக காலியாக உள்ளது. இரவு காவலர் இல்லாததால் வகுப்பறைக்குள் நுழைந்து விஷமிகள் கழிப்பறையாக பயன்படுத்துவது, முட்டையை உடைத்து வீசுவது, சுவற்றில் தவறான வாசகங்களை எழுதி வைப்பது ஆகியவற்றை செய்கின்றனர். மதுபாட்டில்களை உடைத்துள்ளனர். பலமுறை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தும் பலனில்லை என்றார்.இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா கூறுகையில், பெரியபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இரவுநேர காவலர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை