மேலும் செய்திகள்
சேத்தாண்டி வேடம் அணிந்த நேர்த்திக்கடன் பக்தர்கள்
10-Aug-2025
கமுதி : -கமுதி அருகே கே.வேப்பங்குளம் கிராமத்தில் அரியநாச்சி அம்மன் கோயில் ஆடி பொங்கல், முளைப்பாரி விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. பால்குடம் அக்னிச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயில் முன்பு கிராமமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். முளைக்கொட்டு திண்ணையில் இருந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் முளைப்பாரி துாக்கி ஊர்வலமாக கொண்டு சென்று தண்ணீரில் கரைத்தனர். கமுதி அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து கிராமமக்கள் கலந்து கொண்டனர்.
10-Aug-2025