உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருவாடானை தபால் அலுவலகத்தில் ஆதார் பதிவு செய்யாததால் பாதிப்பு

திருவாடானை தபால் அலுவலகத்தில் ஆதார் பதிவு செய்யாததால் பாதிப்பு

திருவாடானை : திருவாடானை தபால் அலுவலகத்தில் ஆதார் பதிவு சேவை இல்லாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆதார் அட்டை அத்தியாசியத் தேவைகளில் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனை பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில் தபால் நிலையங்கள் தோறும் ஆதார் பதிவு துவங்கப்பட்டது. ரூ.50 கட்டணத்தில் ஆதார் அட்டைகளில் பிழைகள் திருத்தம் செய்யும் வசதியும் உண்டு. ஆதார் பதிவு, பெயர் மாற்றம், முகவரி மாற்றம் செய்ய பெரும்பாலோர் தபால் நிலையங்களில் இச்சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இருந்த போதும் இதற்கென தனியாக அலுவலர் இல்லை. தபால் நிலைய ஊழியர்களே இப்பணியை கூடுதலாக செய்து வருகின்றனர்.திருவாடானையை தலைமையிடமாகக் கொண்டு 12க்கும் மேற்பட்ட கிளை தபால் அலுவலகங்கள் உள்ளன. இதில் சின்னக்கீரமங்கலம், தொண்டி, மங்களக்குடி ஆகிய தபால் நிலையங்களில் மட்டுமே இச்சேவை உள்ளது. திருவாடானையில் ஆதார் பதிவு இல்லாததால் பொதுமக்கள் பாதிக்கபட்டுள்ளனர். திருவாடானை தபால் அலுவலக ஊழியர்கள் கூறுகையில், ஆதார் பதிவு செய்யும் அலுவலர்களுக்கு தனியாக ஐ.டி., வழங்கப்படும். இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு ஐ.டி., வழங்காததால் ஆதார் பதிவு செய்ய முடியவில்லை. ஐ.டி., வழங்கபட்டவுடன் ஆதார் பதிவு சேவை துவங்கும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை