உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தேவிபட்டினம் பகுதியில் விவசாய பணிகள் தீவிரம்

தேவிபட்டினம் பகுதியில் விவசாய பணிகள் தீவிரம்

தேவிபட்டினம் : தேவிபட்டினம் சுற்றுப்புற பகுதிகளில் நெற்பயிர்கள் வளர்ச்சி நிலையில் உள்ளதால் அப்பகுதியில் விவசாயிகள் விவசாயப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.தேவிபட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான கழனிக்குடி, இலந்தைகூட்டம், கோப்பேரிமடம், சம்பை, முத்துச்சாமிபுரம், கழனிக்குடி, மாதவனுார், கருப்பூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தற்போது வளர்ச்சி நிலையை அடைந்துள்ளன.இன்னும் சில வாரங்களில் பொதி(மகசூல்) பருவத்தை எட்டும் நிலையில் உள்ளதால் நெற்பயிர்களுக்கு கண்மாயில் உள்ள நீரை பாய்ச்சி வயல்களுக்கு உரமிடும் பணி, பூச்சி மருந்து தெளிக்கும் பணியை விவசாயிகள் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.பரவலாக தேவிபட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள நெல் விவசாயிகள் பயிர்களின் வளர்ச்சித் தன்மைக்கு ஏற்ப உரமிடுதல், மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு விவசாய பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை