உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எமனேஸ்வரத்தில் ஆண்டாள் விடையாற்றி உற்ஸவம்

எமனேஸ்வரத்தில் ஆண்டாள் விடையாற்றி உற்ஸவம்

பரமக்குடி : பரமக்குடி அருகே எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டாள் விடையாற்றி உற்ஸவம் நடந்தது.எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபைக்கு பாத்தியமான பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை திருப்பாவை பாடப்பட்டு மகா உற்ஸவம் நடந்தது. தனிச் சன்னதியில் அருள்பாலிக்கும் ஆண்டாள் மார்கழி முதல் நாள் பெருமாள் சன்னதிக்கு எழுந்தருளினார். அப்போது கூடாரவல்லி வைபவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு ஆண்டாள், பெருமாள் சன்னதியில் இருந்து நின்ற திருக்கோலத்தில் சர்வ அலங்காரத்துடன் புறப்பட்டார். சிறுமியர், பெண்கள் தீபம் ஏந்தி, கோலாட்டம் ஆடி ஆண்டாளை சன்னதிக்கு அழைத்து சென்றனர். அங்கு தீபாராதனைகள் நடத்தப்பட்டு, பெண்களுக்கு குங்குமம், வளையல், திருமாங்கல்ய கயறு என பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இரவு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை