உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சிறிய கைத்தறி நெசவுப் பூங்கா அமைக்க விண்ணப்பிக்கலாம்

சிறிய கைத்தறி நெசவுப் பூங்கா அமைக்க விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம், - ராமநாதபுரம் மாவட்ட தொழில் முனைவோர் அரசு நிதி உதவியுடன் சிறிய அளவில் கைத்தறி நெசவுப் பூங்கா அமைக்க விண்ணப்பிக்கலாம்.தமிழக பாரம்பரியம் மிக்க கைத்தறி நெசவுத் தொழிலை பாதுகாத்து கைத்தறி துணி ரகங்கள் உற்பத்தியை பெருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 10 இடங்களில் அரசு நிதி உதவியுடன் சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் அமைக்க திட்டமிட்டுள்ளனர்.சிறிய கைத்தறி நெசவுப் பூங்கா அமைக்க தொழிற்கூடம், குடோன் வசதியுள்ள தொழில் முனைவோர்கள் 100 கைத்தறிகள் அமைத்து கைத்தறி ஆடைகளை உற்பத்தி செய்து சந்தையிட்டு லாபம் ஈட்டலாம். நெசவாளர்களுக்கு வேலை அளிப்பது மட்டுமின்றி, தொழிலில் முன்னேற்றம் அடைந்து ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு உள்ளது. மேலும் விபரங்களுக்கு www.loomworld.inஎன்ற இணையதள முகவரியில் உரிய படிவத்தில் மார்ச் 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி