உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  அஞ்சலகத்துடன் இணைந்த ஏ.டி.எம்., சேவை துவக்கம்

 அஞ்சலகத்துடன் இணைந்த ஏ.டி.எம்., சேவை துவக்கம்

ராமநாதபுரம்: சில தொழிநுட்ப தரம் மேம்பாட்டிற்காக அஞ்சலகத்துடன் இணைந்த ஏ.டி.எம்., மைய செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் அச்சேவையை மக்கள் பயன்படுத்தலாம். அஞ்சலகம் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி உள்ளது. அஞ்சலக கணக்குதாரர்களுக்கு வழங்கப்படும் ஏ.டி.எம்., கார்டுகளை பயன்படுத்தி, அஞ்சலக ஏ.டி.எம்., மையங்களிலும் பணப்பரிவர்த்தனை செய்யலாம். சில தொழிநுட்ப தர மேம்பாடு காரணமாக அஞ்சலகத்துடன் இணைந்த ஏ.டி.எம்., மைய செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது அந்தப்பணி முடிவுற்று ராமநாதபுரம் தலைமை அஞ்சலகம் மற்றும் ராமேஸ்வரம் துணை அஞ்சலங்களில் ஏ.டி.எம்., சேவை மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. இந்த சேவை வாயிலாக பொதுமக்கள் தங்கள் அஞ்சலக சேமிப்புக் கணக்கிலிருந்து பண பரிவர்த்தனை செய்யலாம். தங்கள் சேமிப்பு கணக்கு இருப்பை அறிந்து கொள்ளலாம். பிற வங்கிகளின் ஏ.டி.எம்., அட்டைகளை அஞ்சல் துறை ஏ.டி.எம்., மையங்களில் பயன்படுத்தலாம். அஞ்சலகத்துக்கு வழக்கமான அலுவலக நேரங்களில் வர இயலாத வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொதுமக்கள் இச்சேவையை பயன்படுத்தி கொள்ளலாம் என ராமநாதபுரம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை