உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்

கீழக்கரை -கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியில் ராமநாதபுரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மற்றும் முகம்மது சதக் கல்விக் குழுமங்கள் இணைந்து நடத்திய மதுபானம் மற்றும் போதை பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.கலால் உதவி இயக்குனர்சிவசுப்பிரமணியன், மதுவிலக்கு டி.எஸ்.பி., ராஜு ஆகியோர் போதைப் பொருள்களின் தீமைகள்குறித்து விளக்கினர். கல்லுாரி துணை முதல்வர்செந்தில்குமார் வரவேற்றார்.முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர் நிர்மல் கண்ணன், பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் சேக்தாவூத், செய்யது ஹமீதியா கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் ராஜசேகர், பாரதிதாசன் பல்கலை பேராசிரியர் அலிபாபா உட்பட பலர் பங்கேற்றனர். கல்லுாரி தேர்வு கட்டுப்பாட்டாளர் ராஜேஸ்வரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ