உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் பா.ஜ., ஹிந்து முன்னணியினர் யாக பூஜை

ராமேஸ்வரத்தில் பா.ஜ., ஹிந்து முன்னணியினர் யாக பூஜை

ராமேஸ்வரம்: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி ராமேஸ்வரத்தில் பா.ஜ., ஹிந்து முன்னணியினர் யாக பூஜை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.நேற்று அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பாரம்பரியமிக்க இவ்விழாவை நாடு முழுவதும் பொதுமக்கள் விமரிசையாக கொண்டாடி வீடுகளில் விளக்குகள் ஏற்றி மகிழ்ந்தனர். அதன்படி நேற்று ராமேஸ்வரம் காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில் பா.ஜ., மாவட்ட பார்வையாளர் முரளிதரன் தலைமையில் புரோகிதர்கள் மந்திரம் முழங்க யாக வேள்வி பூஜை நடந்தது.மேலும் ஆஞ்சநேயர் கோயிலில் ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமையில் பூஜை நடந்தது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். பா.ஜ., ராமேஸ்வரம் நகர் தலைவர் ஸ்ரீதர், பா.ஜ., நிர்வாகிகள் ராமு, கணேசன், நம்புபிச்சை, வி.எச்.பி., மாவட்ட தலைவர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி