உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  சிக்கலில் நடந்த பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்

 சிக்கலில் நடந்த பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்

சிக்கல்: சட்டசபையில் விதி எண் 110ல் அறிவிக்கப்பட்ட சிக்கலை யூனியனாக நடைமுறைப்படுத்தாத தி.மு.க., அரசை கண்டித்து கடலாடி பா.ஜ., கிழக்கு ஒன்றியம் சார்பில் சிக்கல் பஸ் ஸ்டாப் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கடலாடி கிழக்கு ஒன்றியத் தலைவர் ஸ்டாலின் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி முன்னிலை வகித்தார். நாகூர் பாண்டியன் வரவேற்றார். நிர்வாகிகள் முருகேசன், ராணுவப் பிரிவு மாவட்டத் தலைவர் மேகசெல்வம், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் செந்தில்குமார், ஒன்றிய தலைவர்கள் வேலவன், எஸ்.கே. தேவர், மோகன்தாஸ், சேதுராமலிங்கம், கீழக்கரை நகர் தலைவர் ரகு, முன்னாள் ஒன்றிய தலைவர்கள் அழகுமலை, பால்ராஜ், மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் பரமேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர். ராஜா வீரபத்திரன் நன்றி கூறினார். ஏராளமான பா.ஜ., வினர் பங்கேற்று கண்டன கோஷங்களை முழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை