உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  கடல் சீற்றத்தால் படகுகள் சேதம்

 கடல் சீற்றத்தால் படகுகள் சேதம்

தொண்டி: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் வீசிய பலத்த காற்று, கடல் சீற்றத்தால் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேத மடைந்தன. வங்ககடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தொண்டியில் நேற்று காலையில் பலத்த காற்று வீசியது. கடல் சீற்றமாக காணப்பட்டது. பலத்த மழையும் பெய்தது. தொண்டி அருகே புதுக்குடி கடற்கரையில் வழக்கமாக 100க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தபட்டிருக்கும். கடல் சீற்றம், பலத்த காற்றால் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தன. மீனவர்கள் கூறுகையில், தொண்டி கடல் எப்போதும் அமைதியாக காணப்படும். ஆண்டுதோறும் பல்வேறு புயல்கள் தாக்கிய போதும் படகுகள் சேதமடைந்ததில்லை. நேற்று பலத்த காற்று, கடல் சீற்றத்தால் 10க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை