உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குறை தீர்க்கும் நாள் ரத்து மக்களிடம் மனு பெறுவதற்கு பெட்டி வைப்பு

குறை தீர்க்கும் நாள் ரத்து மக்களிடம் மனு பெறுவதற்கு பெட்டி வைப்பு

ராமநாதபுரம், : லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக மக்களிடம் மனுக்களை பெறுவதற்காக பெட்டி வைத்துள்ளனர்.ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.மனுக்களை நேரடியாக கலெக்டர் பெறுவதால் ஏராளமான மக்கள் வருகின்றனர். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல் நன்னடத்தை விதிகளின்படி திங்கள் தோறும் நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக கலெக்டர் அலுவலக நுழைவுப்பகுதியில் மக்கள் மனுக்களை போடுவதற்காக பெட்டி வைக்கப்பட்டுள்ளது என வருவாய்துறை அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி