உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / செவல்பட்டியில் மாட்டுவண்டி பந்தயம்

செவல்பட்டியில் மாட்டுவண்டி பந்தயம்

சாயல்குடி: சாயல்குடி அருகே செவல்பட்டியில் கருப்பசாமி கோயில் பொங்கல் விழாவில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.கடந்த பிப்.2 அன்று காப்பு கட்டுகளுடன் பொங்கல் விழா துவங்கியது. நேற்று முன்தினம் அதிகாலையில் கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் பொங்கலிட்டனர்.கிடாக்கள் பலியிடப்பட்டு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் வள்ளி திருமணம் நாடகம் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு பூஞ்சிட்டு, நடுமாடு, சிறிய மாடு ஆகிய பிரிவுகளில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 60 மாட்டு வண்டி வீரர்கள் பங்கேற்றனர். முதல் நான்கு இடங்களை பெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கு ரொக்க பணம் பரிசாக வழங்கப்பட்டது. வண்டி ஓட்டிய சாரதிக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை