உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்; கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்; கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

முதுகுளத்துார் : -முதுகுளத்துார் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் அரசு மருத்துவமனை அருகே நடந்தது. பேரூராட்சி தலைவர் ஷாஜகான் தலைமை வகித்தார். செயல் அலுவலர் செல்வராஜ், வார்டு கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர்.முகாமில் வருவாய்த்துறை,பேரூராட்சி, கூட்டுறவு உட்பட 13 துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். பேரூராட்சி மக்கள் ஏராளமானோர்​ கலந்து கொண்டு பட்டா மாறுதல், ரேஷன் கார்டு பெயர் திருத்தம் உட்பட பல்வேறு குறைகள்குறித்து மனுக்கள் அளித்தனர்.முகாமில் ராமநாதபுரம்மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் அர்ச்சனா பட்நாயக் நேரில் ஆய்வு செய்தார். பொதுமக்கள், அதிகாரிகளிடம்திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்