உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மழையால் மிளகாய் விவசாயிகள் மகிழ்ச்சி

மழையால் மிளகாய் விவசாயிகள் மகிழ்ச்சி

ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை மிளகாய் செடிகளுக்கு ஏற்றதாக அமைந்ததால் மிளகாய் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக அதிகளவில் மிளகாய் சாகுபடி நடக்கிறது. மிளகாய் செடிகள் தற்போது குத்துச்செடியாக வளர்ச்சி நிலையில் பூப்பூக்கும் பருவத்தை எட்டியுள்ளன. வளர்ச்சி நிலையில் இருக்கும் போது காற்றுடன் கூடிய கனமழை பெய்து மிளகாய் வயலில் தண்ணீர் தேங்கினால் மிளகாய் செடிகள் அழுகி பாதிக்கப்படும் நிலை ஏற்படும். மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்ததால் மிளகாய் விவசாயிகள் சற்று கலக்கத்தில் இருந்தனர். இந்நிலையில், இரண்டு நாட்களாக ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மிளகாய் செடிகளுக்கு ஏற்ற வகையில் மிதமான மழை பெய்தது. இதனால் மிளகாய் செடிகள் பாதிப்பில் இருந்து தப்பியதால் மிளகாய் விவசாயிகள் நிம்மதி அடைந்தவுடன், மிளகாய் செடிக்கு ஏற்ற ஈரப்பதம் நிலவுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி