உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  மும்மதத்தினர் நடத்திய கிறிஸ்துமஸ் விழா

 மும்மதத்தினர் நடத்திய கிறிஸ்துமஸ் விழா

கமுதி: கமுதி அருகே பசும்பொன் மார்னிங் ஸ்டார் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லுாரியில் மும்மதத்தினர் இணைந்து கிறிஸ்துமஸ் விழா கொண்டாடினர். செயலர் அல்போன்ஸ் தலைமை வகித்தார். புனித அந்தோணியார் சர்ச் பங்கு தந்தை அம்புரோஸ் லுாயிஸ், துணை இயக்குனர் தங்கவேல்,செயலாளர் ரகுமான் அப்துல் கனி முன்னிலை வகித்தனர். முதல்வர் அமலி வரவேற்றார். கல்லுாரி வளாகத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டு மாணவிகள் கேக் வழங்கினர். பின் ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த மும்மதத்தினரும் இணைந்து ஒற்றுமையை பறைசாற்றும் விதத்தில் மதச்சார்பு இல்லாமல் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடினர். அப்போது மாணவி களின் கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் கிறிஸ்து பிறப்பு குறித்து தத்ரூபமான நாடகம் நடித்து காட்டினர். மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள், பேராசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை