உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாரனுார் நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

பாரனுார் நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

ஆர்.எஸ்.மங்கலம் -ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாரனுார் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வு செய்தார்.பாரனுார் கொள்முதல் நிலையத்தில் அங்கிருந்த எடை இயந்திரம், நெல்லின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டபின் கலெக்டர் கூறியதாவது:மாவட்டத்தில் 100 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு தற்போது 70 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அறுவடை செய்யப்பட்ட நெல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் தற்போது வரை 350 டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு லட்சம் டன் நெல் விவசாயிடமிருந்து கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நேரடியாக விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்கு ஆன்லைன் பதிவின் மூலம் விற்பனை செய்யலாம். விவசாயிகள் நெல்லை விற்பனை செய்வதற்கு அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கோ, இடைத்தரகர்களுக்கோ எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. எனவே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெற்களை விற்பனை செய்து பயனடையலாம் என்றார்.வேளாண் இணை இயக்குனர்(பொ) தனுஷ்கோடி, ஆர்.எஸ்.மங்கலம் உதவி இயக்குநர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை