உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ஆருத்ரா தரிசன விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

 ஆருத்ரா தரிசன விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

ராமநாதபுரம்: உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தார். எஸ்.பி., சந்தீஷ் உடனிருந்தார். கோயில் வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம், பஸ்கள் நிறுத்துமிடம் மற்றும் தரிசன டிக்கெட் வழங்குமிடம், குடிநீர் விநியோகிக்கும் இடம், தற்காலிக பொது கழிப்பறை அமையும் கூடாரங்கள், சாலை வசதி, மின்விளக்கு வசதி ஆகியவற்றை பார்வையிட்டார். தேவைக்கேற்ப உட்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் வலியுறுத்தினார். ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ஹபிபூர் ரகுமான், தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், தாசில்தார் செல்லப்பா, பி.டி.ஓ., ராஜேஸ்வரி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை