உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கேரளாவிற்கு சுற்றுலா சென்ற கல்லுாரி மாணவர் பலி

கேரளாவிற்கு சுற்றுலா சென்ற கல்லுாரி மாணவர் பலி

கடலாடி: கடலாடி அருகே பொதிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கவுதம் 22. இவர் கோயம்புத்துாரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் எம்.டெக்., இரண்டாம் ஆண்டு கல்வி பயின்று வந்தார். இந்நிலையில் வார விடுமுறை முன்னிட்டு தனது இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுடன் 10 பேர் கேரளாவிற்கு வேனில் சுற்றுலா சென்றனர். சித்துார் என்ற கிராமத்தில் நீரோடையில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது நீர் சுழற்சி ஏற்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட கவுதம் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் பொதிகுளம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !