உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கரூரில் பலியானவர்களுக்கு காங்., கட்சியினர் அஞ்சலி

கரூரில் பலியானவர்களுக்கு காங்., கட்சியினர் அஞ்சலி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தாலுகா நகர் காங்., அலுவலகத்தில் கரூரில் த.வெ.க., பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் தலைமை வகித்தார். பொறுப்புக்குழு உறுப்பினர் ஜோதிபாலன் முன்னிலை வகித்தார்.ராஜாராம் பாண்டியன் கூறியதாவது: கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். மூன்று நாட்களுக்கு கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றார். ராமநாதபுரம் தாலுகா உறுப்பினர்கள் சேகர், ஆனந்த குமார், தேவகுரு போஸ், சேதுப்பாண்டியன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ