உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி சுந்தர்நகரில் பாலம் அமைக்கும் பணி

பரமக்குடி சுந்தர்நகரில் பாலம் அமைக்கும் பணி

தினமலர் செய்தி எதிரொலிபரமக்குடி: பரமக்குடி சுந்தர் நகர் கழிவுநீர் பாலம் 2 ஆண்டுகளாக சேதமடைந்து சீரமைக்கப்படாமல் இருந்தது. தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக புதிய பாலம் அமைக்கப்படுகிறது.பரமக்குடி சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளி அருகில் நகராட்சி சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு 6 அடி அகலம் கொண்ட கழிவுநீர் கால்வாய் மீது பாலம் உள்ளது. இந்த பாலம் 2021ல் நகராட்சி மண் அள்ளும் இயந்திரத்தில் சுத்தம் செய்த போது ஒரு பக்க தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. பள்ளி மாணவர்கள் சுந்தர் நகர் செல்லும் மக்கள் அச்சத்துடன் பயணித்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன்காரணமாக 2 ஆண்டுகளுக்கு பின், ரூ.6லட்சத்தில் 4.5 மீட்டர் அகலம் கொண்ட புதிய பாலம் அமைக்கப்படுகிறது. பாலத்தின் இருபுறமும் கான்கிரீட் ரோடு அமைத்து சீர் செய்ய வேண்டும். அங்குள்ள இரட்டை மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என மக்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை