மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
10 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
10 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
10 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
10 hour(s) ago
ராமேஸ்வரம்:சூறாவளி வீசுவதால் பாம்பன் கடலில் புதிய ரயில் பாலத்தில் துாக்கு பாலம் பொருத்தும் பணி தாமதமாகி வருகிறது. இதனால் திட்டமிட்டபடி பிப்ரவரில் ரயில்சேவை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ரூ.535 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டுமான பணி நடக்கிறது. 2 கி.மீ., துாரம் உள்ள பாலத்தில் 1.5 கி.மீ., பணி நுாறு சதவீதம் முடிந்த நிலையில் மீதமுள்ள 500 மீ., துாரத்தில் துாண்கள் மட்டும் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் வழியாக 550 டன்னில் வடிவமைத்த துாக்கு பாலத்தை நகர்த்தி சென்று நடுவில் பொருத்த உள்ளனர்.அனைத்து பணியும் முடிந்ததும் பிப்.24ல் பாலத்தில் ரயில் போக்குவரத்து துவங்க ரயில்வே வாரியம் முடிவு செய்தது. ஆனால் கடந்த இரு மாதமாக சூறாவளி வீசுவதால் பாம்பன் கடலில் அதிக நீரோட்டம் உள்ளது.இதனால் பாலம் நடுவில் கடலில் தற்காலிக துாண்கள் ஊன்ற முடியாத சூழல் உள்ளதால் துாக்கு பாலத்தை பொருத்தும் பணி தாமதமாகிறது. பிப்., க்குள் துாக்கு பாலம், 500 மீ., தூரத்தில் இரும்பு கர்டர்கள், தண்டவாளம் பொருத்தி ரயில் சோதனை ஓட்டத்திற்கு பிறகுதான் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்து துவங்க முடியும். ஆனால் அதற்கான சாத்தியம் குறைவு என்பதால் திட்டமிட்டபடி பிப்., க்குள் ரயில் போக்குவரத்து துவங்க வாய்ப்பில்லை என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago