உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பழைய பள்ளி கட்டடம் சேதம் மாணவர்களுக்கு விபத்து அபாயம்

பழைய பள்ளி கட்டடம் சேதம் மாணவர்களுக்கு விபத்து அபாயம்

ராமநாதபுரம்: நயினார்கோவில் அரசுமேல்நிலைப்பள்ளியில் பயன்பாட்டில் இல்லாத பழமையானகட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. விபத்திற்கு முன்பாக அப்புறப்படுத்த வேண்டும்.நயினார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவர்கள் பயன்பாட்டில் இருந்த கட்டடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் இரு வகுப்பறை கொண்ட கட்டடங்கள் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. கழிப்பறைக்கு செல்லும் வழியாகவும், மாணவர்கள் நடமாடும் பகுதியாக உள்ளதால் சேதமடைந்த கட்டடத்தால் விபத்து அபாயம் உள்ளது.எனவே விபத்திற்கு முன்பாக பள்ளிக்கல்வி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து பழைய கட்டடங்களை அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்