உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சாயல்குடி 6-வது வார்டில் சேதமடைந்த ரோடுகள் மக்கள் அவதி

சாயல்குடி 6-வது வார்டில் சேதமடைந்த ரோடுகள் மக்கள் அவதி

சாயல்குடி: -சாயல்குடி பேரூராட்சியில் 1 முதல் 15 வார்டுகள் உள்ளன. 6வது வார்டில் அரண்மனை தெரு, அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில் தெரு, காயம்பு சாமி கோவில் தெரு, தெற்கு தெரு உள்ளிட்ட தெருக்களில் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். அப்பகுதி மக்கள் கூறியதாவது:இப்பகுதியில் சாலை அமைத்து 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தரமற்ற சாலை பணியால் தார் சாலை சேதமடைந்துள்ளது. நாள்தோறும் சிரமத்தை சந்திக்கிறோம். பெரும்பாலான தெருக்களில் கழிவுநீர் செல்ல வாறுகால் வசதி இல்லாததால் நடு ரோட்டில் தண்ணீர் தேங்கி குளம் போல் மாறியுள்ளது.இதனால் சுகாதாரக் கேடு நிலவுவதால் கொசுப்பண்ணை உற்பத்தியாகி பகலிலும், இரவிலும் கடிக்கிறது. தெருக்களில் உள்ள மின்கம்பங்களில் எல்.இ.டி., பல்புகள் எரியாமல் காட்சி பொருளாக உள்ளன. பல இடங்களில் பல்புகளும் இல்லை.ஆலாட்டு ஊரணி உள்ளிட்ட பகுதிகளில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி கவுன்சிலர் பேரூராட்சி கூட்டத்தில் முறையிட்டாலும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி