உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் வைக்கோல் வாகனங்களால் ஆபத்து

பரமக்குடியில் வைக்கோல் வாகனங்களால் ஆபத்து

பரமக்குடி, : பரமக்குடி பகுதியில் அதிகளவில் வைக்கோல் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளது. பரமக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் நெல் விவசாயம் நடந்தது. ஒரு மாதமாக இயந்திரத்தில் அறுவடைப் பணிகள் நடக்கும் நிலையில் வைக்கோல் முழுமையாக கிடைப்பது இல்லை. மேலும் மாடு வளர்ப்பு குறைந்துள்ளதால் பலரும் வைகோலை வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு அனுப்புகின்றனர்.இதனால் வைக்கோலை முறையாக கட்டிச் செல்லாமல் அதிகளவில் வாகனங்களில் ஏற்றி வருகின்றனர். இவை பின்னால் வரும் வாகன ஓட்டிகளின் கண்களில் விழுந்து கவன குறைவை உண்டாக்குகிறது. மேலும் நெரிசலான இடங்களில் வைக்கோல் வாகனங்களால் விபத்த அபாயம் உள்ளது.எனவே போக்குவரத்து போலீசார் வைக்கோல் வாகனங்களை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை