கம்யூ., செயலாளருக்கு கொலை மிரட்டல்
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் பார்க்கிங்கில் வாகனங்களுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பதை தடுக்கக் கோரி இந்திய கம்யூ., கட்சியினர் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பார்க்கிங் கட்டணம் வசூலிப்பவர் கட்சியின் ராமேஸ்வரம் நகர் செயலாளர் செந்தில்வேல் அலைபேசியில் தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இதனை கண்டித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கவும், செந்தில்வேலுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் ஏ.எஸ்.பி., மீராவிடம் இந்திய கம்யூ., நிர்வாகிகள், ஆட்டோ டிரைவர்கள் பலர் புகார் மனு அளித்தனர்.