உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஓட்டல்களில் பிளாஸ்டிக் பை பயன்படுத்துவது அதிகரிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை

ஓட்டல்களில் பிளாஸ்டிக் பை பயன்படுத்துவது அதிகரிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை

கீழக்கரை -கீழக்கரை நகரில் சில ஓட்டல்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் உணவு பொருட்களை வைத்து விற்கின்றனர். அவற்றை பறிமுதல் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.கீழக்கரை நகராட்சி, திருப்புல்லாணி, சிக்கல், சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் பார்சல் உணவு வாங்குவோரிடம் வாழை இலையில் வைத்து கட்டாமல் பிளாஸ்டிக் பேப்பரை வைத்தும் சாம்பார், சட்னி, உள்ளிட்டவர்களுக்கு தனித்தனியாக பிளாஸ்டிக் கவர்களில் வைத்து நிரப்புகின்றனர். பரோட்டா, இட்லி, தோசை உள்ளிட்ட உணவுப் பொருள்கள் பார்சல் வாங்கும் பொழுது வாழை இலையில் வைக்காமல் பிளாஸ்டிக் தாளில் வைத்து கட்டுகின்றனர். சூடாக கட்டப்படும் இவற்றில் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தக்கூடிய கெமிக்கல் உண்டாகிறது. அதேபோல டீ, காபி போன்றவற்றையும் பிளாஸ்டிக் பைகளில் ஊற்றி கொடுக்கின்றனர். இவை புற்று நோய்க்கு வழி வகுக்குகிறது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:ஓட்டல்களில் பிளாஸ்டிக் தீமை பற்றி விளக்கி கூறுறோம். ஓட்டல் மற்றும் டீக்கடைகளுக்கு செல்லும் மக்கள் துாக்குச்சட்டி மற்றும் பார்சல்களுக்கு பிளாஸ்டிக் பை தவிர்த்து மஞ்சள் பை கொண்டு செல்ல வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ