டெங்கு ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட மலேரியா அலுவலர் ரமேஷ், தலைமையாசிரியர் சந்தனவேல், இளநிலை பூச்சியியல் வல்லுனர் பாலசுப்பிரமணியம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பூமிநாதன், நாட்டு நலப்பணி திட்ட ஆசிரியர் மங்களநாதன் பங்கேற்றனர். உடன் சுகாதார ஆய்வாளர்கள் நேதாஜி, ஜெயச்சந்திரன், கருணாகர சேதுபதி, சபரிமுருகன் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.